விராட் கோலி - 40-வது சதத்தை பூர்த்தி செய்து பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார் !!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதமெடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

இது அவருடைய 40-வது ஒருநாள் சதம்.

நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 48.2 ஓவரில் 250 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 116 ரன்கள் குவித்தார். இது அவருடைய 40-வது ஒருநாள் சதம்.

இந்திய கிரிகெட் அணி கேப்டன் விராட் கோலி ரன் எடுப்பதில் வல்லவர். அதனால் அவரை ரன் மெஷின் என செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.

இதன் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் கேப்டனாக வேகமாக 9000 ரன்களை கடந்து சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), கிரேம் ஸ்மித் (தென்ஆப்பிரிக்கா), ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து), எம்எஸ் டோனி (இந்தியா), ஆலன் பார்டர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

தற்போது விராட் கோலி 6-வது வீரராக இச்சாதனையை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் 10 பவுண்டரிகள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவின் சேவாக், சச்சின் தெண்டுல்கர், கங்குலி ஆகியோரும் 1000 பவுண்டரிகளுக்கு மேல் அடித்துள்ளனர்.

இந்த சதம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது சதத்தை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் மூன்று நாடுகளுக்கு எதிராக 7 சதங்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிராக 8 சதங்களும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 7 சதங்களும் அடித்துள்ளார்.

சொந்த மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 18 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 20 சதங்கள் அடித்துள்ளார்.

விராட் கோலியின் சதம்

40-வது ஒருநாள் சதம்

65-வது சர்வதேச சதம்

18-வது ஒருநாள் கேப்டனாக

அதிக ஒருநாள் சதங்கள்

49 சச்சின் டெண்டுல்கர் (452 இன்னிங்ஸ்)

40 விராட் கோலி (216 இன்னிங்ஸ்)

30 ரிக்கி பாண்டிங் (365 இன்னிங்ஸ்)

விராட் கோலியின் 40 ஒருநாள் சதங்கள்

8 vs இலங்கை

7 vs மே.இ, ஆஸ்திரேலியா

5 vs நியூஸிலாந்து

4 vs தென் ஆப்பிரிக்கா

3 vs இங்கிலாந்து, வங்கதேசம்

2 vs பாகிஸ்தான்

1 vs ஜிம்பாப்வே


<