மருத்துவ குணமும் நிறைந்த சுவையான மாம்பழம் !

முக்கனியில் ஒன்றான மாம்பழம்.

இந்தியாவின் தேசியக் கனி (National Fruit) மாம்பழம் (Mango) ஆகும்.

மாம்பழம் சுவைக்காக மட்டுமல்லாமல், அதில் உள்ள பல மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள் :-

மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது.

மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.

மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும் நரம்பு தளர்ச்சியை போக்கும், பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும்.

150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிடலாம்.

மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.

மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. இது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த உதவும்.

இரத்த ஓட்டம் சீராகும், கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.