அடிக்கடி உங்களுக்கு ஏப்பம் வருகிறதா? அது எதனால் வருகிறதா தெரியுமா?

ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது தான் என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது என்பது ஒரு பிரச்சனையாக மாறிவிடும்.

உங்களது வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கங்கள் ஆகியவை சரியாக இருக்க வேண்டியது அவசியம்..

உங்களுக்கு ஏன் அடிக்கடி ஏப்பம் வருகிறது?

குறிப்பிட்ட நேரத்திற்கு நீங்கள் சாப்பிடாமல் இருப்பதால், உங்களது உடலில் உணவுக்கான இடத்தை வாயு நிரப்பிவிடுகிறது. வேகமாக சாப்பிடுவதலும் கூட ஏப்பம் அடிக்கடி வரும்.

அடிக்கடி நீங்கள் கொழுப்பு நிறந்த உணவுகளான எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது அடிக்கடி வரும் ஏப்பத்திற்கு காரணமாக அமைகிறது.

அதிகப்படியான ஏப்பம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தால், வயிற்றில் புண் இருக்கிறது என்று அர்த்தமாகும். இதனால் கடுமையான வயிற்று வலியும் உண்டாகும்.

மலச்சிக்கல் பிரச்சனையானது பல பிரச்சனைகளுக்கு அடிக்கல்லாக இருக்கிறது. நீண்ட நாட்களாக ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் உண்டாகும். இவர்கள் அதிகமாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

இரவு நேரத்தில் ப்ரோக்கோலி, காளிஃபிளவர், முளைக்கட்டிய பயிர்கள் போன்ற வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவது ஏப்பம் வருவதற்கு காரணமாக உள்ளது.