நடிகர் விஜய் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க நேரில் சென்றார்.
கடந்த 27-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ரத்தம், கல்லீரல் தொடர்பான சிகிச்சை தொடர்ந்து பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் நடிகர் விஜய், காவிரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரித்தார்.
ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் தினமும் மருத்துவமனை வந்து, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
நேற்று நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




