Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/விஷால் கோரிக்கை - தயவு செய்து படத்தை விமர்சனம் செய்யாதீர்கள் !
சி‌னிமா செ‌ய்‌தி

விஷால் கோரிக்கை - தயவு செய்து படத்தை விமர்சனம் செய்யாதீர்கள் !

Tuesday, August 25, 2026iCineMass Editorial
விஷால் கோரிக்கை - தயவு செய்து படத்தை விமர்சனம் செய்யாதீர்கள் !

விஷால் நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால் படத்தை தயவு செய்து விமர்சனம் செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

`சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நடிகர் விஷால் விழாவில் பேசும் போது:-

'சண்டக்கோழி 2 திரைப்படம் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற காட்பாதர் படத்தை போல் உருவாகியுள்ளதாகக் கூறினார்.

மேலும் சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன்.

அவர் என்னை ஒரு அக்ஷன் ஹீரோவா கொண்ட வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வது படத்தில் சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். கீர்த்தி உடன் நடித்ததில் பெருமை.

தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். படத்திற்கு விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சியுங்கள். அப்போது தான் சிறிய படம் என்றாலும், பெரிய படம் என்றாலும் வரவேற்பு கிடைக்கும். நான் அனைவரையும் சொல்லவில்லை, குறிப்பிட்ட நபர்களுக்கு தான் வேண்டுகோள் வைக்கிறேன்.

சண்டக்கோழி -2, பந்தையகோழி-2 இரண்டுமே அக்டோபர் 18-ல் வெளிவரவுள்ளது. அதுவும் ஆயுத பூஜை அன்று பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.