கவர்ச்சி நடிகை சன்னிலியோன் வாழ்க்கை படத்தை பார்த்து பலமுறை கதறி அழுதிருக்கிறார்.
சன்னிலியோன் ஆரம்பத்தில் நீலப் படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், பின்னர் பாலிவுட் திரையுலகில் அதிரடியாக நுழைந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இந்தி படங்களில் சன்னிலியோன் நடிப்பதற்கு சில பெண்கள் அமைப்பினர் எதிர்ப்புகள் காட்டி வருகிறார்கள். அதுமட்டுமின்றி அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க கூடாது என சக கவர்ச்சி நடிகைகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தற்போது தமிழில் தயாராகும் "வீரமாதேவி" என்ற சரித்திர படத்தில் சன்னி கதா நாயகியாக நடிக்கிறார்.
சன்னிலியோன் ஏற்கனவே தமிழில் வடகறி, தெலுங்கில் கரண்ட் தீகா, பிஎஸ்வி கருட வேகா, கன்னடத்தில் டிகே ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
சமீபத்தில் சன்னிலியோன் வாழ்க்கை அவரது ஒப்புதலோடு ஆவணப்படமாக தயாராகி உள்ளது. சிறுவயது சம்பவங்கள், செக்ஸ் நடிகையாக மாறிய சூழ்நிலை, குடும்பம் என்று அனைத்து விஷயங்களையும் அதில் பதிவு செய்துள்ளனர்.
இந்த படம் சன்னிலியோனுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த சன்னிலியோன் கதறி அழுதிருக்கிறார். நான் விரும்பாத திசையில் பயணித்து விட்டேன். மேலும் என்னுடைய பெற்றோர்களின் எதிர்ப்பையும் நான் பெற்றேன் என்றும், நான் செய்த சில விஷயங்களை நினைத்து வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.




