Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/ரஜினியிடம் நீங்கள் யார் என கேட்டது ஏன்?
சி‌னிமா செ‌ய்‌தி

ரஜினியிடம் நீங்கள் யார் என கேட்டது ஏன்?

Tuesday, August 25, 2026iCineMass Editorial
ரஜினியிடம் நீங்கள் யார் என கேட்டது ஏன்?

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நேரில் வந்த போது, அவரிடம் "நீங்கள் யார்" ? என கேள்வி எழுப்பியது குறித்து சந்தோஷ்ராஜ் விளக்கம் அளித்திருக்கிறார்.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி சென்றார்.

அப்போது சந்தோஷ்ராஜ் என்ற வாலிபர் "நீங்கள் யார்? 100 கழித்து ஏன் வந்தீர்கள்: ? என ரஜினியிடம் நேரிடையாக கேள்வி கேட்டு அவரை அதிர வைத்தார்.

இந்நிலையில் ரஜினியிடம் கேள்வி எழுப்பிய வாலிபர் சந்தேஷ்ராஜ் இந்த விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு ரஜினி படங்கள் மிகவும் பிடிக்கும். நானும் ரஜினியின் தீவிர ரசிகன்தான். அவர் நடித்த கபாலி படத்தை நின்று கொண்டே பார்த்தவன். அவருக்கு மக்களிடம் மவுசு இருக்கிறது.

எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு அவர் ஆதரவு கொடுத்திருந்தால் எங்கள் போராட்டம் வலுமை அடைந்திருக்கும். அதை அவர் செய்யவில்லை. அந்த கோபத்தில்தான் அவரிடம் அப்படி கேள்வி கேட்டேன். மற்றபடி அவரை காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அவரிடம் மட்டுமல்ல சில அமைச்சர்கள் வந்த போதும் அவரிடம் சில கேள்விகளை கேட்டேன் என சந்தோஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.