Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/நடிகை சார்மி - கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ பிடிக்காது! எல்லாமே பணம் தான் முக்கியம்!!
சி‌னிமா செ‌ய்‌தி

நடிகை சார்மி - கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ பிடிக்காது! எல்லாமே பணம் தான் முக்கியம்!!

Tuesday, August 25, 2026iCineMass Editorial
நடிகை சார்மி - கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ பிடிக்காது! எல்லாமே பணம் தான் முக்கியம்!!

நடிகை சார்மி 'காதல் அழிவதில்லை' தமிழ் படத்தில் நாயகியாக நடித்தவர். இந்நிலையில் நடிகை சார்மியும், பூரி ஜெகன்னாத்தும் இணைந்து படம் தயாரிப்பதால் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வைரலாக பரவியது.

இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சார்மி பேட்டியளித்துள்ளார்.

நானும் பூரி ஜெகன்னாத்தும் இணைந்து படம் தயாரிப்பதால் நாங்கள் காதலிப்பதாக கூறுகின்றனர். வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கவே பிடிக்காத காரணத்தினால் தான், பட தயாரிப்புக்கு வந்தேன். நான் எனக்கு பிடித்த மாதிரி வாழ்வேன், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படமாட்டேன்.

இயற்கையாகவே எனக்கு துணிச்சல் உண்டு யாருக்கும் பயப்பட மாட்டேன். வீட்டில் என்னை பையன்மாதிரி வளர்த்தனர். எனக்கு திருமணம் எப்போது என்று பலரும் கேட்கின்றனர், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

திருமணம் செய்தால் கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். எங்கே போகிறோம், என்ன செய்கிறோம், என்றெல்லாம் நிறைய கேள்விகளும் வரும். திருமணமாகாதவர்கள் அந்த சங்கடங்கள் எதுவும் இல்லாமல் பிடித்த மாதிரி வாழலாம். எனது முடிவை பெற்றோரும் ஏற்றுள்ளனர்.

திருமணம் வாழ்க்கைக்கு பாதுகாப்பானது என்கின்றனர். ஆனல் பணம் தான் பாதுகாப்பு. என்னிடம் எனது வாழ்க்கைக்கு தேவையான பணம் உள்ளது. அதுபோதும் எனக்கு. நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று இவ்வாறு சார்மி கூறினார்.