Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/நடிகர் சத்யராஜ் - தமிழ்நாட்டு மக்கள் முக்கியமா ? - எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா ?
சி‌னிமா செ‌ய்‌தி

நடிகர் சத்யராஜ் - தமிழ்நாட்டு மக்கள் முக்கியமா ? - எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா ?

Tuesday, August 25, 2026iCineMass Editorial
நடிகர் சத்யராஜ் - தமிழ்நாட்டு மக்கள் முக்கியமா ? - எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா ?

நடிகர் சத்யராஜ் தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கு வீடியோவை வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் நடிகர் சத்யராஜ் கூறுகையில் :

தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இதில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவம் எனது நெஞ்சம் பதைக்க வைக்கிறது. எனது மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும்.

ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா?, இங்கே வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் நம் தமிழக மக்களும் நமக்கு முக்கியமா? என்பதை முதலில் ஆராய வேண்டும்.

அவர்களுக்கு என்னுடைய இரங்கலை உங்களில் ஒருவனாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.