லண்டனை சேர்ந்த மைக்கேலுடன், சுருதிஹாசன் ஜோடியாக ஊர் சுற்றுவதால் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.
இதற்கு சுருதிஹாசன் பதில் அளித்துள்ளார்.
கேள்வி:- லண்டனை சேர்ந்த மைக்கேலை திருமணம் செய்துகொள்வீர்களா?
பதில்:- நான் இப்போது திருமணம் செய்துகொள்ளமாட்டேன். மைக்கேல் எனது நண்பர். இதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். என் வாழ்க்கையில் ரகசியம் எதுவும் இல்லை. திருமணம் நிச்சயமானால் உடனே அறிவிப்பேன்.
கேள்வி:- கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்து?
பதில்:- எனது தந்தைக்கு சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால் அரசியலுக்கு வந்துள்ளார். இது பெருமையாக இருக்கிறது. அரசியல்வாதி ஆனபிறகு முன்பை விட பிஸியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார். நாட்டில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவார்.
கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?
பதில்:- எனக்கு அரசியல் தெரியாது. ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அரசியல் புரியாமல் அந்த பக்கம் போகக்கூடாது என்பது எனது கருத்து. எதிர்காலத்தில் அரசியல் ஞானம் ஏற்பட்டால் அப்போது அரசியலுக்கு வருவது பற்றி முடிவை சொல்கிறேன்.
கேள்வி:- சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏன்?
பதில்:- எனது தோழிகள் டைரக்டு செய்யும்படி வற்புறுத்துகிறார்கள். ஆனால் டைரக்டருக்கு பொறுப்பு அதிகம். அதை இப்போது செய்ய மாட்டேன்.
கேள்வி:- கடவுள் நம்பிக்கை பற்றி?
பதில்:- கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கிறது. அடிக்கடி கோவிலுக்கு செல்வேன். பிடித்த கடவுள் முருகன்.
சுருதிஹாசன் இவ்வாறு கூறினார்.




