Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/நடிகர் விஜய் - துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் !
சி‌னிமா செ‌ய்‌தி

நடிகர் விஜய் - துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் !

Tuesday, August 25, 2026iCineMass Editorial
நடிகர் விஜய் - துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் !

நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார்

கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர் மற்றும் பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஏற்கனவே இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் நடிகர் கமல், ரஜினி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு நிதியுதவி வழங்கினர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் திடீரென நேற்று நள்ளிரவில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு நிதியுதவி வழங்கினர்.