Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும்
சி‌னிமா செ‌ய்‌தி

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்  உடனடியாக  பதவி  விலக வேண்டும்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சென்னையில் இன்று (13.05.2018) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், நடிகர்கள் ராதாரவி, ஜே.கே.ரித்தீஸ், ராஜன் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் சங்க பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

புதுப்படங்கள் ரிலீஸான அன்றே இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்காமல் விட மாட்டேன் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சவால் விட்டிருந்தார்.

தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகர் விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அளித்த வாக்குறுதிகளை விஷால் நிறைவேற்றவில்லை.

அவர் ஒராண்டில் நிறைவேற்ற வில்லை என்றால் பதவி விலகுவேன் என்று கூறி இருந்தார். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்:

திரைப்படம் எடுப்பதற்கு சங்கத்தின் அனுமதி தேவையில்லை. தயாரிப்பாளர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. திரைத்துறையில் முதலீடு செய்பவர்கள் தமிழர்கள், ஆனால் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறோம். முதலில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என மாற்றம் வேண்டும் என்றார்.

நடிகர் ராதாரவி பேசும்போது:

தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடித்ததாக சொல்லும் விஷால் அவர்கள் யார் என சொல்லாதது ஏன்?

தயாரிப்பாளர் தங்கம் தேவையா என்பதே கேள்வியாக உள்ளது. சங்கத்தின் விதிமுறைகளில் பல குளறுபடிகள் உள்ளன. தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சங்கத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். விஷால் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

டி.ராஜேந்தர் பேசும்போது:

நடிகர் சங்கத்தின் வைப்பு நிதி ரூ.7 கோடி எங்கே போனது என்பதை விஷால் சொல்ல முடியுமா? பொதுக் குழுவில் கணக்கு கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத கொடுமை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்தது.

லைக்காவுடன் கூட்டு வைத்திருப்பதற்கான காரணத்தை விஷால் கூற வேண்டும். க்யூப் கட்டணத்தை குறைக்க ஸ்டிரைக் செய்தார் விஷால், ஆனால் அந்த கட்டணம் குறைந்ததா ? என கேள்வி எழுப்பினார்.