வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று நடிகர் விஷால் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது விஷால் அளித்த பேட்டியில்:
எனது வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியமானவர்கள். நமது நிறை, குறைகளை எடுத்துச் சொல்வது நண்பர்கள் தான். எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் எனது நண்பர்களை தான் சொல்வேன்.
அந்த வகையில், வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை 8 வயதில் இருந்தே எனக்கு தெரியும். நாங்கள் குடும்ப நண்பர்கள். வரலட்சுமி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் நல்ல தன்னம்பிக்கையான பெண்.
எனது நெருங்கிய தோழி. நாங்கள் நல்ல நண்பர்கள். எனது குறிக்கோள் நடிகர் சங்க கட்டிடம் கட்டிடுவது தான். நல்லது, கெட்டது என அனைத்தையும் வரலட்சுமியுடன் பகிர்ந்து கொள்வேன் என்று இவ்வாறு விஷால் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்டோர் நடித்த இரும்புத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.




