Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/சீமராஜா பாடல் வெளியீட்டு விழா - மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும்
சி‌னிமா செ‌ய்‌தி

சீமராஜா பாடல் வெளியீட்டு விழா - மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
சீமராஜா பாடல் வெளியீட்டு விழா -  மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும்

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த படத்திலிருந்து `வாரேன் வாரேன் சீமராஜா' என்ற சிங்கிள் பாடல் வருகிற ஜூலை 25-ம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம்தான் சீமராஜா.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைதுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை, மதுரையில் நடத்த 24 ஏம் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனர் ஆர்.டி.ராஜா திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறும்போது:-

மதுரை தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துவது என முடிவு செய்தோம்.

இந்த படத்தின் மையக் கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, முடிவு செய்தோம்.

ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் இவ்வாறு கூறினார்.