Follow Us:
Home/விளையா‌ட்டு/பிளே ஆப் சுற்று - பைனல்ஸ் போட்டிகளின் நேரம் திடீர் மாற்றம் ?
விளையா‌ட்டு

பிளே ஆப் சுற்று - பைனல்ஸ் போட்டிகளின் நேரம் திடீர் மாற்றம் ?

Tuesday, August 25, 2026iCineMass Editorial
பிளே ஆப் சுற்று - பைனல்ஸ் போட்டிகளின் நேரம் திடீர் மாற்றம் ?

11- வது ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பிளே ஆப் சுற்று மற்றும் பைனல்ஸ் நடைபெறும் ஆட்டங்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் விளையாடும் 8 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.

அதாவது ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனில் 8 அணிகள் விளையாடுகின்றன.

இப்போட்டிகள் தினமும் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த சீசனின் 57வது ஆட்டமான தகுதிச் சுற்று 1 ஆட்டம் மும்பையில் மே 22ல் நடக்கிறது. எலிமினேட்டர் சுற்று ஆட்டம் மற்றும் தகுதிச் சுற்று 2 ஆட்டம் கொல்கத்தாவில் 25லும், பைனல்ஸ் மே 27ல் மும்பையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பிளே ஆப் சுற்று மற்றும் பைனல் ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் மற்றும் டிவியில் பார்க்கும் ரசிகர்கள், நீண்ட நேரம் அதாவது நடு இரவு வரை கண்முலித்திருப்பதால், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மறுநாள் அலுவலகத்திற்கோ செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது.

இதனை கருத்தில்கொண்டு 1 மணி நேரத்துக்கு முண்ணதாகவே போட்டிகள் ஆரம்பமாகும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.