நேற்று நடந்த 51-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர் 6-வது பெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
டாஸ் வென்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி வில்லியரஸ் 69 ரன்னும், மொயின் அலி 63 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இதில் வில்லியம்சன் 83 ரன்னும், பாண்டே 62 ரன்னும் எடுத்தனர். இதனால் பெங்களூர் 13 ரன் வித்தியாசத்தில் வென்றது.
கேப்டன் விராட் கோலி, எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது 'ஸ்பைடர்மேன்' போல் இருந்தது. இதை நீங்கள் சாதாரண மனிதனாக இருந்தால் செய்ய முடியாது. அவரது பீல்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது.
இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றி உத்வேகத்தை கடைசி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார்.




