Follow Us:
Home/செய்திகள்/ஜெயலலிதாவின் புதிய சிலை - ஓபிஎஸ், ஈபிஎஸ் திறந்து வைத்தனர்
செய்திகள்

ஜெயலலிதாவின் புதிய சிலை - ஓபிஎஸ், ஈபிஎஸ் திறந்து வைத்தனர்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
ஜெயலலிதாவின் புதிய சிலை -  ஓபிஎஸ், ஈபிஎஸ் திறந்து வைத்தனர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் புதிய சிலையை இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் புதிய சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அவரது 70-வது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது.

இந்தச் சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா சிலையை மாற்றியமைக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்தது.

அதனை தொடர்ந்து புதிதாக ஜெயலலிதா சிலை வடிவமைக்கும் பணி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் வழங்கப்பட்டது. 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் ஜெயலலிதா சிலையை அவர் தத்ரூபமாக வடிவமைத்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்துவைக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்து, ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.