Follow Us:
Home/செய்திகள்/குட்கா ஊழல் - அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்
செய்திகள்

குட்கா ஊழல் - அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
குட்கா ஊழல் - அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக  சிபிஐ சம்மன்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளருக்கு குட்கா ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் குட்கா, போதைப் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி துறையினர் செங்குன்றம் குட்கா குடோனில் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

அதன் பின்னர் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த முறைகேடாக குட்கா பொருட்களை விற்ற விவகாரத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.