ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது பேசிய 52 வினாடிகள் ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலை குறைபாடால் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து தமிழக அரசு ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்தது.
போயஸ் கார்டனில் வசித்தவர்கள் பல போரிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில் 2016-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி பதிவு செய்யப்பட்ட, 52 வினாடிகள் கொண்ட ஆடியோ ஒன்றை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மூச்சு திணறலின் பேசிய போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், இரத்த அழுத்தம் 140/80 இருக்கிறது என்று மருத்துவர் கூறுகிறார்.
அது எனக்கு இயல்பு தான் என்று ஜெயலலிதா கூறுகிறார்.
அந்த ஆடியோவில் இவ்வாறு பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது..!




