Follow Us:
Home/செய்திகள்/மே 4ஆம் தேதி தொடங்குகிறதாம் கத்திரி வெயில்!!!
செய்திகள்

மே 4ஆம் தேதி தொடங்குகிறதாம் கத்திரி வெயில்!!!

Tuesday, August 25, 2026iCineMass Editorial
மே 4ஆம் தேதி தொடங்குகிறதாம் கத்திரி வெயில்!!!

தமிழகத்தில் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கூடவே அனல் காற்றும் வீசுவதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கத்திரி வெயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வெப்பக்காற்று வீச உள்ளதால், வேலூா், சேலம், திருச்சி, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.