Follow Us:
Home/செய்திகள்/பிரதமர் நரேந்திர மோடி - ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டார்
செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி - ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டார்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
பிரதமர் நரேந்திர மோடி - ஃபிட்னஸ் வீடியோவை  வெளியிட்டார்

பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டார்.

கடந்த மாதம் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டார்.

நாம் ஃபிட்டாக இருந்தால் தான், நாடு ஃபிட்டாக இருக்கும் அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோஹ்லி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார் ரத்தோர்.

ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோஹ்லி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.

இதையடுத்து விராட் கோஹ்லியின் சவாலை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறிய பிரதமர் மோடி விரைவில் வீடியோவை வெளியிடுவேன் என்றார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் 1.48 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை மோடி வெளியிட்டுள்ளார். அதில், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.