Follow Us:
Home/செய்திகள்/செங்கோடையில் கொடியேற்றி பிரதமர் உரை
செய்திகள்

செங்கோடையில் கொடியேற்றி பிரதமர் உரை

Tuesday, August 25, 2026iCineMass Editorial
செங்கோடையில் கொடியேற்றி பிரதமர் உரை

இன்று இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில், மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா இப்போது 6வது இடத்தில் உள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக இந்தியா பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா என்பது இந்தியர்கள் அனைவருக்குமானது என்பதை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவார்கள். அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.