இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடித்துவரும் திரைப்படம் "பேட்ட".
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Happy Birthday Superstar @rajinikanth! Here is the #PettaBirthdayTrEAtSER :https://t.co/niMWiucT6n
— Sun Pictures (@sunpictures) December 12, 2018
@Rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl@SimranbaggaOffc @trishtrashers @Nawazuddin_S @sonymusicsouth #HappyBirthdaySuperstar #HBDSuperStarRajinikanth
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த டீசரில் ரஜினி இளமை தோற்றத்தில் இரண்டு கெட்-அப்களில் மாஸ் தோற்றத்தில் வருகிறார். மேலும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.




