Home/செய்திகள்/காற்றில் பறக்கும் டெஸ்லா கார்? எலான் மஸ்க்கின் புதிய முயற்சி!
செய்திகள்

காற்றில் பறக்கும் டெஸ்லா கார்? எலான் மஸ்க்கின் புதிய முயற்சி!

Saturday, October 17, 2026•iCineMass Editorial
காற்றில் பறக்கும் டெஸ்லா கார்? எலான் மஸ்க்கின் புதிய முயற்சி! - image 1
காற்றில் பறக்கும் டெஸ்லா கார்? எலான் மஸ்க்கின் புதிய முயற்சி! - image 2
காற்றில் பறக்கும் டெஸ்லா கார்? எலான் மஸ்க்கின் புதிய முயற்சி! - image 3

மின்சார கார் தயாரிப்பில் உலகளவில் கவனம் பெற்றுள்ள எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், அடுத்தகட்டத் தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோட்ஸ்டர் காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்ட இந்தக் காரின் அறிமுகம், பல்வேறு காரணங்களால் தாமதமானது. தற்போது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, காரின் செயல்திறனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ரோட்ஸ்டர் காரில், ‘கோல்டு கேஸ் த்ரஸ்டர்ஸ்’ எனப்படும் உந்துவிசை அமைப்புகளும், அழுத்தப்பட்ட காற்றுத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் காரைத் தரையிலிருந்து உயர்த்தும் புதிய வசதிகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கார் காற்றில் பறந்து சுழன்று மீண்டும் தரையிறங்குவது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த வீடியோ பார்வையாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

நீண்டகால எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ரோட்ஸ்டர் காரின் தயாரிப்புப் பணிகள் 2028-ஆம் ஆண்டில் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார் தயாரிப்பில் விண்வெளித் தொழில்நுட்பத்தை இணைக்கும் இந்த முயற்சி, எதிர்கால வாகன உலகில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.