Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/நடிகர் சூர்யா - சசிகுமார் இயக்கதில் நடிக்க இருப்பதாக தகவல் !
சி‌னிமா செ‌ய்‌தி

நடிகர் சூர்யா - சசிகுமார் இயக்கதில் நடிக்க இருப்பதாக தகவல் !

Tuesday, August 25, 2026iCineMass Editorial
நடிகர் சூர்யா - சசிகுமார் இயக்கதில் நடிக்க இருப்பதாக தகவல் !

நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இயக்கும் ஒரு சரித்திர படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சுப்பிரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களை இயக்கிய சசிகுமார் அதன்பின் திரைப்படங்களை இயக்காமல் நடிக்க தொடங்கினார்.

தற்போது நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா இந்த இரண்டு படங்களை முடித்த பின் சசிகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகுமார் கடந்த சில வருடங்களாக ஒரு சரித்திர கதையை படமாக இயக்க அவர் முயன்று வருகிறார்.

இந்த கதையை விஜயிடம் கூறி அவரை நடிக்க வைக்க முயன்றார். ஆனால் புலி படம் கொடுத்த தோல்வி சரித்திர கதை படத்தில் நடிக்கவே விஜய் யோசிப்பதாக தெரிகிறது.

எனவே இந்த கதையை சூர்யாவிடம் கூறினார், கதை அவருக்குப் பிடித்துப்போக உடனே சம்மதித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.