Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/நடிகர் விஷ்ணு விஷால் - திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..!
சி‌னிமா செ‌ய்‌தி

நடிகர் விஷ்ணு விஷால் - திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..!

Tuesday, August 25, 2026iCineMass Editorial
நடிகர் விஷ்ணு விஷால் - திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..!

நடிகர் விஷ்ணு விஷால் நாங்களும் மனிதர்கள்தான் அமலாபாலுடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.

தற்போது விஷ்ணு விஷால் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் திடீர் என்று சமூக வலைதளங்களில் விஷ்ணு விஷால் விரைவில் அமலாபாலை, இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

ராட்சசன் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருப்பதால் இது உண்மையாக இருக்கும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

விஷ்ணு விஷால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.

அதில்... என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி. தயவுசெய்து பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள்தான், நாங்களும் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறோம். இது தொடர்பாக யாரும் எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு வணக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.