Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/பிக் பாஸ் ஜூலி - இரட்டை வேடத்தில் நடிக்கிறார்
சி‌னிமா செ‌ய்‌தி

பிக் பாஸ் ஜூலி - இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
பிக் பாஸ் ஜூலி - இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாணவர் ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சிறிது நாளிலேயே தனியார் தொலைக்காட்சியில், குழந்தைகள் நடன நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராக ஆனார் பிக் பாஸ் ஜூலி.

தற்போது "அம்மன் தாயி" என்ற பெயரில் உருவாகி வரும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஜூலி. இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கும் இவர் அம்மன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் புதுமுகம் அன்பு காதாநாயகனாகவும், சரண் வில்லனாகவும் நடிக்கின்றனர். மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

பிக் பாஸ் ஜூலி தெய்வ அம்சம் கொண்ட பெண்ணாக நடித்துள்ள இவர் இப்படத்தில் அருள் வாக்கெல்லாம் கூறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் இயக்கி முடிக்கப்பட்டுள்ளது, இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.