Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/எனக்கு கிளாமர் வேடங்கள் ஒத்தே வராது - அதிதி ராவ்!
சி‌னிமா செ‌ய்‌தி

எனக்கு கிளாமர் வேடங்கள் ஒத்தே வராது - அதிதி ராவ்!

Tuesday, August 25, 2026iCineMass Editorial
எனக்கு கிளாமர் வேடங்கள் ஒத்தே வராது - அதிதி ராவ்!

படத்தில் எனக்கு கிளாமர் வேடங்கள் பொருத்தமாக இருக்காது என்று நடிகை அதிதி ராவ் ஹைதரி கூறியுள்ளார்.

தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு படங்களில் நடிப்பவர் அதிதி ராவ் ஹைதரி.

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடிக்கிறார் அதிதி ராவ் ஹைதரி.

தனது சினிமா பயணம் குறித்து அவர் கூறியதாவது

தமிழ், தெலுங்கில் நடித்து வருவது நல்ல அனுபவமாக இருக்கிறது. சென்னைக்கும் ஐதராபாத்துக்கும் பறந்து கொண்டே இருக்கிறேன்.

எனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சிலர் தகவல் பரப்புகிறார்கள். இது பற்றி மற்றவர்கள் எதற்கு கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. என்னுடைய தயாரிப்பாளர்கள்தான் இதை பற்றி கவலைப்பட வேண்டும்.

எனக்கு பணத்தை விட நல்ல படங்கள்தான் முக்கியம். படத்தில் எனக்கு கிளாமர் வேடங்கள் பொருத்தமாக இருக்காது.

நான் பாலிவுட்டில் கூட கிளாமரான கேரக்டர்களில் நடித்ததில்லை, மாடர்ன் உடைகளில் நடித்தாலும் எனது கேரக்டர் ஹோம்லியாகத்தான் பெரும்பாலான படங்களில் இருக்கும் என அதிதி ராவ் ஹைதரி கூறியுள்ளார்.



எனக்கு கிளாமர் வேடங்கள் ஒத்தே வராது - அதிதி ராவ்! - iCineMass.Com