Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/நடிகர் அஜித் - எம்.ஐ.டி- ல் மாணவர்களின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் !
சி‌னிமா செ‌ய்‌தி

நடிகர் அஜித் - எம்.ஐ.டி- ல் மாணவர்களின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் !

Tuesday, August 25, 2026iCineMass Editorial
நடிகர் அஜித் - எம்.ஐ.டி- ல் மாணவர்களின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் !

மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லுரியின் ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் ஆளில்லா விமான அமைப்பின் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வருகிற செப்டம்பர் மாதம் ஆள் இல்லாத விமானத்தை பயன்படுத்தி மருத்துவ சேவை செய்வதற்கான போட்டி நடைபெறுகிறது.

இதில் சென்னை எம்.ஐ.டி. தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் குழு பங்கேற்கிறது.

அதற்காக நடிகர் அஜித்குமார் போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கும் பணிக்கு அஜித்குமாரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகுப்புக்கு செல்ல நடிகர் அஜித்துக்கு சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த சம்பளம் தனக்கு வேண்டாம். அந்த தொகையை ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக வழங்கும்படி என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

நம்மா தலா அஜித் சினிமாவை தாண்டி, பல துறைகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அதில் சமையல், விமானம் ஓட்டுவது, பைக் ரேஸ், புகைப்படம் எடுப்பது, துப்பாக்கி சுடுவது என பல துறைகளில் அவருக்கு ஈடுபாடு அதிகம்.