முதல் முறையாக ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கும் நடிகர் தனுஷ் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருக்கிறார்.
இந்த படத்தை கனடாவை சேர்ந்த பிரபல டைரக்டர் கென் ஸ்காட் டைரக்டு செய்துள்ளார்.
இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ (BERENICE BEJO), பர்காத் அப்தி (BARKHAD ABDI), அபெல் ஜப்ரி (ABEL JAFRI), எரின் மோரியார்டி (ERIN MORIARTY) உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் வேலைகள் முடிந்த நிலையில் வரும் மே 30-ம் தேதி பிரான்ஸில் ரிலீஸாக உள்ளது. அதே வாரத்தில் 'வாழ்க்கய தேடி நானும் போனேன்' எனும் டைட்டிலில் தமிழிலும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை சோனி பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது.
இந்த படம் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இதற்காக தனுஷ் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக, பட குழுவினருடன் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதுவே முதல்முறை கேன்ஸ் படவிழாவில் தனுஷ் பங்கேற்பது.




