Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/'காலா' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சி‌னிமா செ‌ய்‌தி

'காலா' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, August 25, 2026iCineMass Editorial
'காலா' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

'காலா' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக கருதப்படும் நிலையில், இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வரும் மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் 7ஆம் தேதி என்பதை தனுஷ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பாடல்கள் ரிலீஸ் விழா நடக்கும் இடம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. காலா படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வெளியாகவுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.