Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/காலா படத்தின் முதல் பாடல் 'செம்ம வெயிட்டு' நாளை வெளியாகிறது!
சி‌னிமா செ‌ய்‌தி

காலா படத்தின் முதல் பாடல் 'செம்ம வெயிட்டு' நாளை வெளியாகிறது!

Tuesday, August 25, 2026iCineMass Editorial
காலா படத்தின் முதல் பாடல் 'செம்ம  வெயிட்டு' நாளை வெளியாகிறது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் முதல் பாடல், நாளை மாலை வெளியிடப்பட உள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாக உள்ளது.

அதுமட்டுமின்றி இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மே 9ம் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார். அதை உறுதி செய்துள்ள நிலையில் சற்றுமுன் 'காலா' குறித்த இன்னொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்..

அதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'செம வெயிட்டு' என்று தொடங்கும் பாடல் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.