Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/நடிகர் சத்யராஜ் - திரைத்துறை பெண்கள் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பேன் !
சி‌னிமா செ‌ய்‌தி

நடிகர் சத்யராஜ் - திரைத்துறை பெண்கள் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பேன் !

Tuesday, August 25, 2026iCineMass Editorial
நடிகர் சத்யராஜ் - திரைத்துறை பெண்கள் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பேன் !

சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்கு உதவுவேன் என்று தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டு நடிகர் சத்யராஜ் பேசினார்.

சாஸ்திரம், சடங்குகள், பண்பாடு, கலாசாரம் போன்றவை பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. மதம், சாதி வேறுபாடுகளும் இதற்கு உதவுகின்றன. இவற்றில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும்.

பெண்கள் எதற்காக அடிமையாக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும். திரையுலகில் இருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் கல்வி, பொருளாதாரத்தில் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தில் உயர்ந்தால்தான் உரிமைக்காக போராட முடியும். திரைத்துறை பெண்கள் பாதுகாப்பு அமைப்புக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்று இவ்வாறு நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.