பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும் 'செக்கச் சிவந்த வானம்'
இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தற்போது படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதிக்கு, நடிகர் சிம்பு ஊட்டிவிடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




