தல – தளபதி சந்திப்பு: சில்வர்ஸ்டோனில் நெகிழ்ச்சியான தருணம்!
Monday, September 14, 2026•iCineMass Editorial
தல அஜித் மற்றும் தளபத விஜய் ஆகிய இருவரும் லண்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயத் தளத்தில் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய் தனது முதலாவது அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக லண்டன் சென்றுள்ளார்.
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் தான் அமைக்கத் திட்டமிட்டுள்ள 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' (Motor Sports City) திட்டத்திற்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளைப் பார்வையிடவும் அவர் பிரிட்டன் சென்றுள்ளார்.
அஜித் குமார் பங்கேற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தை காண நடிகர் விஜய் சில்வர்ஸ்டோனுக்கு சென்றிருந்தார். அங்கு சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொண்டு, பந்தயத்தை தொடங்கி வைக்கும் பச்சைக் கொடியையும் (Green Flag) அசைத்தார்.
மைதானத்திற்கு விஜய் வருகை தந்தபோது, நடிகர் அஜித் குமார் நேரில் சென்று அவரை அன்புடன் கட்டிப்பிடித்து வரவேற்றார். இருவரும் அன்போடு சந்தித்துக் கொண்ட இந்த நெகிழ்ச்சியான தருணம் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 9:30 மணி அளவில் தொடங்கிய கார் ரேஸ் இரவு 11:47 மணிக்கு நிறைவடைந்தது. 50 லேப்கள் கொண்ட இந்த போட்டியில் ஏஎன்எஸ் மோட்டார் ஸ்போர்ட் அணி முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை ஆர்எஸ்ஜிபி அணி பிடித்தது.
மூன்றாவது இடத்தை டீம் விராஜ் சார்பில் களம் இறங்கிய அஜித் அணி பிடித்தது.
தொடர்புடைய செய்திகள் (Related Stories)




