Follow Us:
Home/விளையா‌ட்டு/21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மாலை தொடங்குகிறது
விளையா‌ட்டு

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மாலை தொடங்குகிறது

Tuesday, August 25, 2026iCineMass Editorial
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மாலை தொடங்குகிறது

இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து திருவிழா தொடங்க உள்ளது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிஃபா (FIFA) 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மாலை தொடங்குகிறது.

ஆண்டுகளுக்கு ஒரு முறை பிஃபா (FIFA) உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இதில் 32 நாடுகள் பங்கேற்கும், முதல் போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்கினி மைதானத்தில், ரஷ்யா - சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன.

இதில் 32 நாடுகள் பங்கேற்கும், முதல் போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்கினி மைதானத்தில், ரஷ்யா - சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன.

தொடக்க விழா நிகழ்ச்சிகள், மாஸ்கோவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் சவுதி அரேபிய இளவரசர் பங்கேற்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கால்பந்து வீரர்கள் சார்பாக, பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ரஷ்யாவில் 11 நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளில், ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் வீதம் 8 பிரிவுகளாக நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழா அடுத்த மாதம் 15-ம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவுபெறும்.

2022-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெறம் என பிஃபா (FIFA) அறிவித்துள்ளது.