ஒரு ரன் கொடுக்க வேண்டிய இடத்தில் நான்கு ரன்களை கொடுக்கிறோம். பீல்டிங் மிகவும் மோசம். இப்படியெல்லாம் விளையாடினால் நாம எப்படி ஜெயிக்க முடியும் என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விரக்தியுடன் குறிப்பிட்டார்.
முதலில் ஒடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி, 5ல் தோல்வியுடன் புள்ளிப்பட்டியில் 7வது இடத்தில் பெங்களூர் அணி உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்றார்.




