Follow Us:
Home/விளையா‌ட்டு/இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி
விளையா‌ட்டு

இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி

Tuesday, August 25, 2026iCineMass Editorial
இந்தியாவை வீழ்த்தி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையிலான, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்தன.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 2 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் ஷிகர் தவானும், கேப்டன் விராட் கோலியும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் தவான் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான் ஆட்டைத்தை வெளிபடுத்திய ட்விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்களை இழந்து 256 ரன்களை எடுத்தது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வின்ஸ் 27 ரன்களிலும், பெய்ர்ஸ்டோவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரூட்-டும், கேப்டன் மோர்கனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதன்மூலம், 44.3 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது.