கே.எல் ராகுல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக நியமனம்

ஐபிஎல் 2020-ம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக அதிரடி துவக்க வீரர் கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று 13-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்க 8 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஏலதில் பங்கேற்க வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கேப்டனாக செயல்படுவதிலும் சிறந்து விளங்குவார் என தெரிவித்தார்.

கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி அணிக்கு 7.40 கோடிக்கு ஏலத்திற்கு முன்பாக நடைபெற்ற வீரர்கள் வர்த்தகத்தில் மாற்றப்பட்டார். இவர் தலைமையில் இரண்டு சீசன்களிலும் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை.

இந்த ஐபிஎல் ஏலத்தில், பஞ்சாப் அணி ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை 10.75 கோடிக்கு வாங்கியது.

பஞ்சாப் அணி வீரர்கள் பட்டியல் பேட்ஸ்மேன்கள்:-

கிறிஸ் கெய்ல், மாயங்க் அகர்வால், கருண் நாயர், சர்பராஸ் கான், மந்தீப் சிங்

பந்துவீச்சாளர்கள்: ஷெல்டன் கோட்ரெல் (ரூ 8.5 கோடி), இஷான் பொரல் (ரூ 20 லட்சம்), ரவி பிஷ்னோய் (ரூ 2 கோடி), முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங், ஹார்டஸ் வில்ஜோன், எம் அஸ்வின், ஜே சுசித், ஹர்பிரீத் ப்ரார் , தர்ஷன் நல்கண்டே.

ஆல்ரவுண்டர்கள்:

க்ளென் மேக்ஸ்வெல் (ரூ. 10.75 கோடி), ஜேம்ஸ் நீஷாம் (ரூ .50 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (ரூ .3 கோடி), கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா (ரூ .50 லட்சம்), தாஜிந்தர் சிங் தில்லான் (ரூ .20. மில்லியன்).\n\nவிக்கெட் கீப்பர்கள்: கே.எல்.ராகுல் (சி), நிக்கோலஸ் பூரன், பிரப்சிம்ரன் சிங் (ரூ. 55 லட்சம்).


<