Follow Us:
Home/செய்திகள்/திமுக தலைவர் கருணாநிதி - காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி - காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Tuesday, August 25, 2026iCineMass Editorial
திமுக தலைவர் கருணாநிதி - காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை திமுக தலைவர் கருணாநிதிக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ குழுவினரும் வந்தனர். அதன்பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, திடீரென்று ஏற்பட்ட ரத்த அழுத்த குறைபாடு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது 20 நிமிட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கூறினார்.

தற்போது காவேரி மருத்துவமனை அருகிலும், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு அருகிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.