பூசணி விதைகளை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பூசணி விதைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது.

எடை குறைவு

பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை வளமான அளவில் உள்ளது. இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும். எனவே எடையைக் குறைக்க பூசணி விதைகளை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வாருங்கள்.

கொலஸ்ட்ரால் குறையும்

பூசணி விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும், உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் இருந்தால், அது இதய நோய்க்கு வழிவகுப்பதோடு, பக்கவாதத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும். ஆகவே தினமும் தவறாமல் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மனநிலை பிரச்சனைகள்

பூசணி விதைகள் ஒருவரது மனநிலையை மேம்படுத்தி, மன இறுக்கத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள் தான். இந்த பைட்டோ-கெமிக்கல், ட்ரிப்டோஃபேனை செரடோனினான மாற்றி, மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மனநல பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.