நடிகர் விஜய் - நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, " தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் திரு.விஜய் அவர்கள், நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக, அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம், மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" என்று அறிவித்துள்ளது.

ஏற்கெனவே உதயநிதி, கமல், கார்த்தி தலா ரூ.1 கோடி வழங்கினர். சுமார் 12 கோடி ரூபாய் நிதி நடிகர் சங்கத்துக்கு கிடைத்துள்ளது.