உள்ளாட்சி தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 898 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 35,611 பேரும் போட்டியிடுகின்றனர். மேலும், 18,570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

வருகிற 27 மற்றும் 30-ம் தேதிகளில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. பெறப்பட்ட வேட்புமனுக்களில் 3 ஆயிரத்து 643 வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பி.ன் நிராகரிக்கப்பட்டன.

மேலும் 48 ஆயிரத்து 891 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் இறுதியாக தேர்தல் களத்தில் உள்ளனர் என இவ்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.