தமிழக சட்டசபை - ஆளுநர் உரையுடன் ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இந்திய அரசமைப்புச் சட்டம் 176(1) ந் கீழ் கூட்டத்தொடரின் முதல் நாளன்று ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தை கூட்டுவது மரபாக உள்ளது. அந்த வகையில் வருகிற 6- ம் தேதி சட்டசபை கூடுகிறது.

2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் முதல் நாளன்று உரை நிகழ்த்துகிறார். அதன் பின்பு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் மீதான விவாதம் நடைபெறும்.

சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பின்னர் முதல்வர் அது தொடர்பாக பதில் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.