தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக தொடந்து வாரங்கள் மட்டும் இந்த பானத்தைக் குடித்து வந்தால் மிக வேகமாக உடல் எடை குறைந்துவிடும்.
உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதற்கு நிறைய மருந்துகள், மாத்திரைகள் மார்க்கெட்டுகளில் கிடைகின்றன. அதேபோல் பண வசதி படைத்தவர்கள் அறுவை சிகிச்சை கூட செய்து கொள்வார்கள். ஆனால் இவற்றின் மூலம் ஏராளமான பக்க விளைகள் ஏற்படும்.
இதுபோன்று பக்க விளைவுகள் ஏதுமில்லாத இயற்கையான வழியில் எடையைக் குறைக்கும் பொருட்கள் நம்முடைய சமையலறையிலேயே இருக்கின்றன.
ஆனால் இதைக் குடித்துப் பாருங்கள். நிச்சயம் 2 வாரங்களிலேயே உங்கள் உடல் எடையில் அபார மாற்றத்தைக் காண்பீர்கள்.
தேவையான பொருள்கள்
சுக்குப்பொடி
மஞ்சள் தூள்
கருஞ்சீரகம்
எலுமிச்சை சாறு
தேன் (தேவைப்பட்டால்)
செய்முறை
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் காய்ந்த இஞ்சி என்று சொல்லப்படுகிற சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும், அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம்.
இந்த கலவையை நன்கு ஒரு நிமிடத்துக்குக் கலக்குங்கள். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விடுங்கள்.
வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்க வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தால் தவறில்லை.
ஆறவிட்டுக் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் பெரிதாகப் பலன் இருக்காது. தேன் சேர்க்காமல் குடிப்பது எடையை வேகமாகக் குறைக்க உதவும்.
இந்த பானத்தைப் பொருத்தவரையில், ஒரு மாதம் வரையிலும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த பானத்தைக் குடித்து வரலாம். அப்படி ஒரு மாதம் வரையிலும் குடித்தால் கிட்டதட்ட 15 கிலோ வரையிலும் எடை குறைக்க முடியும்.