சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா? என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது..
அப்படி தண்ணீர் குடித்தால் என்ன உடல்நலப்பிரச்சனைகள் வரும் என்பது குறித்து பார்க்கலாம்.
உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அப்படிக் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்
நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் போகும். அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
ஒரு சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் நீரை முழுவதுமாகக் குடிப்பார்கள். அது கூடாது. சாப்பிட்டு பிறகு குறைந்தபச்சம் 15 நிமிடங்கள் கழித்து கொஞ்சம் தண்ணீர் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பிக்கலாம்.
அதேபோல் சாப்பிடுவதற்கு முன்னரும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனென்றால் வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு மட்டுமில்லாமல் உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காது. சாப்பிடுவதற்கு குறைந்தபச்சம் 10 நிமிடங்கள் முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது. .