ஜம்மு-காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் பெரும்பாலும் பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் ஆவர்.
புல்வாமா தாக்குதல் நடந்த சரியாக 3 வாரம் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குண்டு வெடித்த பேருந்தில் மக்கள் இருந்தார்களா என்பது குறித்து சரியான தகவல் இல்லை. ஆனால் குண்டு வெடித்ததை அடுத்து, சம்பவ இடத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
உள்ளூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்ததால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.