மு.க.ஸ்டாலின் - திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை வெளியிட்டார்

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் 10 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 1 தொகுதியும் என மொத்தம் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

திமுக போட்டியிடும் தொகுதிகள்:

சென்னை வடக்கு

சென்னை தெற்கு

மத்திய சென்னை

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம் (தனி)

அரக்கோணம்

வேலூர்

தர்மபுரி

திருவண்ணாமலை

கள்ளக்குறிச்சி

சேலம்

நீலகிரி (தனி)

பொள்ளாச்சி

திண்டுக்கல்

கடலூர்

மயிலாடுதுறை

தஞ்சாவூர்

தூத்துக்குடி

தென்காசி (தனி)

திருநெல்வேலி

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

திருவள்ளூர் (தனி)

கிருஷ்ணகிரி

ஆரணி

கரூர்

திருச்சிராப்பள்ளி

சிவகங்கை

தேனி

விருதுநகர்

கன்னியாகுமரி

புதுச்சேரி

மதிமுக கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

கோயம்புத்தூர்

மதுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:

திருப்பூர்

நாகப்பட்டினம் (தனி)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் :

ராமநாதபுரம்

விடுதலை சிறுத்தைகள்:

விழுப்புரம் (தனி)

சிதம்பரம் (தனி)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:

நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி :

பெரம்பலூர்

மேலும் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.