ஓ.பன்னீர் செல்வம் - அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வர்மான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

எந்தெந்த கட்சிக்கு, எந்தெந்த தொகுதிகள் என்பதை துணைமுதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இன்று அறிவித்தார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்:

தென்சென்னை

காஞ்சீபுரம் (தனி)

திருவண்ணாமலை (தனி)

சேலம்

நாமக்கல்

ஈரோடு

திருப்பூர்

நீலகிரி (தனி)

பொள்ளாச்சி

கிருஷ்ணகிரி

ஆரணி

கரூர்

பெரம்பலூர்

சிதம்பரம் (தனி)

நாகப்பட்டினம் (தனி)

மயிலாடுதுறை

மதுரை

தேனி

திருவள்ளூர்

திருநெல்வேலி

பாமக போட்டியிடும் தொகுதிகள்:

தர்மபுரி

விழுப்புரம்

அரக்கோணம்

கடலூர்

மத்திய சென்னை

திண்டுக்கல்

ஸ்ரீபெரும்புதூர்

பாஜக போட்டியிடும் தொகுதிகள்:

கன்னியாகுமரி

சிவகங்கை

கோவை

ராமநாதபுரம்

தூத்துக்குடி

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:

கள்ளக்குறிச்சி

திருச்சி

சென்னை வடக்கு

விருதுநகர்

என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

புதுச்சேரி

த.மா.கா போட்டியிடும் தொகுதிகள் :

தஞ்சாவூர்

புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதிகள்:

தென்காசி

புதிய நீதிக்கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

வேலூர்

தொகுதி பங்கீடு பட்டியல் வெளியான நிலையில், 8 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடிப்போட்டி காண்கிறது.