அ.தி.மு.க. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்கள் மற்றும், இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை உள்ளன.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்குப் பின் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதிமுக வேட்பாளர்களின் பட்டியல்:-
தென் சென்னை - ஜெயவர்த்தன்
திருவள்ளூர் - வேணுகோபால்
காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்
திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திருநெல்வேலி - மனோஜ்பாண்டியன்
தேனி - ரவீந்திரநாத்குமார்
மதுரை - ராஜ்சத்யன்
நாகப்பட்டினம் - சரவணன்
மயிலாடுதுறை - ஆசைமணி
சிதம்பரம் - சந்திரசேகர்
பெரம்பலூர் - சிவபதி
கரூர் - தம்பிதுரை
பொள்ளாச்சி - மகேந்திரன்
நீலகிரி - தியாகராஜன்
திருப்பூர் - ஆனந்தன்
ஈரோடு - மணிமாறன்
நாமக்கல் - காளியப்பன்
சேலம் - சரவணன்
ஆரணி - செஞ்சி வெ.ஏழுமலை
கிருஷ்ணகிரி - கே.பி. முனுசாமி
18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்:-
தஞ்சாவூர் - காந்தி
மானாமதுரை - நாகராஜன்
ஆண்டிப்பட்டி - லோகிராஜன்
பெரியகுளம் - முருகன்
பாப்பிரெட்டிபட்டி - கோவிந்தசாமி
அரூர் - சம்பத்குமார்
நிலக்கோட்டை - தேன்மொழி
திருவாரூர் - ஜீவானந்தம்
குடியாத்தம் - கஸ்பா ஆர்.மூர்த்தி
ஆம்பூர் - ஜோதிராமலிங்கராஜா
ஓசூர் - ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி
பூந்தமல்லி - வைத்தியநாதன்
பெரம்பூர் - ராஜேஷ்
திருப்போரூர் - ஆறுமுகம்
சோளிங்கர் - சம்பத்
சாத்தூர் - ராஜவர்மன்
பரமக்குடி - சதன்பிரபாகர்
விளாத்திகுளம் - சின்னப்பன்